பொத்துவில் நகரின் அனைத்து பிரதான மற்றும் உள் வீதிகளில் மும்மொழிகளிலும் வீதிப் பெயர்ப்பலகைகள் நடப்பட்டுள்ளன. 'கிக்கோலா' நிறுவனத்தின் அனுசரனையுடன் பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம். முதற்கண், பொத்துவில் பொதுமக்கள் சார்பாக பிரதேச சபைக்கும் குறித்த அனுசரனையாளருக்கும் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்னதான் அத்தி பூப்பதுபோல் புதுப்புது எண்ணங்கள் எமது பிரதேசசபைக்கு தோன்றினாலும் அது அரைகுறையாக காட்சி தருவதுதான் அருவெறுப்பாய் இருக்கிறது.
சில வீதிகளின் பெயர்கள், தமிழில் எழுதியிருக்கும் விதம் என்ன என்று விளங்கவேயில்லை.....

எழுத்துப்பிழை ஒரு பக்கம்!
வீதிகளின் பெயர்கள் பெயர்ப்பலகையின் இடமாற்றத்தால் தடுமாற்றம்.....
இது எழுத்துப்பிழையா... இல்லை இதுதானா, இந்த வீதியின் பெயர் என்ற குழப்பம் மறுபக்கம்!!
பொத்துவிலின் ஹிதாயாபுரம் நகரில் "அல்-முனௌவரா பள்ளிவாயல் வீதி" என்று எழுத வேண்டிய பெயர்ப்பலகையில் அல்-முனௌவறரா என்று "ற" வை இழுத்துக் கொண்டிருக்கிறது பொத்துவில் பிரதேச சபை. இதில் வேடிக்கை என்னவென்றால், உண்மையாகவே இப்பெயர்ப்பலகை பொத்துவிலின் கொடிமரத்தடி அருகில் உள்ள பள்ளிவாயல் வீதியாக குறிப்பிட வேண்டியது ஏறத்தாள ஒரு கிலோமீற்றர் பின்னோக்கி வந்து அல்-முனீரா மஸ்ஜித் வீதியில் வைக்கப்பட்டதுதான். மேலும் அதே 'வட்டை'யில்தான் பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் "வாஸித்" வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

![]() | |||
கொடிமரத்தடியில் பல்வேறு இடமாற்றங்களுக்குப்பின் எழுத்துப்பிழைகளுடன் வந்துசேர்ந்த பெயர்ப்பலகை |
எனினும், பெயர்ப்பலகையின் இடமாற்றநிலை கண்டு குறித்த வீதிகளில் வசிப்போர் பெயர்ப்பலகை நாட்டியோரிடம் சொன்னதால் இன்று(2012-08-04) பொருத்தமான இடங்களில் பெயர்ப்பலகை இடப்பட்டது.
மேலும்......
பொத்துவிலின் பிரதான வீதியோடு தொடர்புபடும் இன்னொரு வீதியின் பெயர்ப்பலகையின் கொடுமையை என்னவென்று சொல்ல....
"நாவலடி வீதி" என்று இடவேண்டிய இடத்தில் "நாவையடி வீதி" என்று இட்டிருப்பதுதான் அடுத்த கொடுமை......
தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தில் தமிழுக்கு நேர்ந்த கதியென்னவோ....
இதில் "வாத்தியார் வீதி"யென்றும் ஒரு வீதி உள்ளது. எந்த வாத்தியார் என்றுதான்.... தெரியவில்லை!
இப்படியான.. பெயர்ப்பலகையின் மொழிப்பிரச்சனைகள் நாடு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவை வேற்று மொழி பெரும்பான்மையோர் வாழும் பகுதிகளிலே காணப்படுவது வழமை. அது தொடர்பில் வாய்கிழிய பேசும் நாம், நம் பிரதேசத்தில் நம்மாளே அதே பிரச்சனையை உண்டாக்குவதுதான் வேடிக்கையானது.
இந்த வீதிகள் தொடர்பான செய்திகள் தொடரும்.........
No comments:
Post a Comment