Monday, December 29, 2014

சால்வையில் தொங்கிய ரவூப் ஹக்கீம் அன்னத்தில் சவாரி!


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் 'மைத்திரிபால சிறிசேன' அவர்களை ஆதரித்து பொத்துவில் நகரில் இன்று (2014-12-28 ஞாயிற்றுக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, கரு ஜயசூரிய, தயாகமகே மற்றும் இன்று அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவை வழங்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


வழமையை விட கூட்டத்திற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

இதில் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றும் போது......

"பொதுவேட்பாளருக்கு பேசுவது புரியவேண்டும் என்பதற்கான சிங்கள மொழியில் பேச நினைக்கிறேன். இன்று நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எமது ஆதரவை வழங்க கட்சி சார்பாக முடிவெடுத்துள்ளோம். மேலும் இத்தேர்தலில் இக்கூட்டணிடன் இணைந்து செயற்பட்டு இக்கூட்டத்தை ஒழுங்கு செய்த S.S.P. மஜீத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

வேறு இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்ல இருப்பதால் விரைவாக பேச்சை சுருக்கிக்கொண்டார் தலைவர் ரவூப் ஹக்கீம் .

கூட்டத்தில்  ரவூப் ஹக்கீம் அவர்கள் ஆற்றிய உரையை கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை
(Link) அழுத்துவதன் மூலம் காணலாம்.

https://www.youtube.com/watch?v=yUKFbADUJNs&feature=youtu.be
 
 

Friday, December 26, 2014

வசந்தம் டிவியில் தூவானம்!

 
பொத்துவில் மாஸ்டர் ஏ.எல்.ஏ. முஹம்மத் அவர்களின் நேர்காணல் நாளை சனிக்கிழமை (2014-12-27) காலை 10 மணியளவில் வசந்தம் டிவியின் தூவானம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழாசானான இவர் பிரபல கவிஞரும் ஆவார்.
 
இந்நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சியை கீழுள்ள வீடியோவில் காணமுடியும்.
 
 
 
 
 





வெள்ளப்பெருக்கின் விளையாட்டுக்கள்!



பொத்துவில் பிரதேசத்தில் பெய்த அடர் மழை காரணமாக நாலாபுறமும் வெள்ளம் குடிகொண்டுள்ளது.

குறிப்பாக பொத்துவில் - செங்காமம் வீதியின் முதலாம் கட்டை அடியில் தாம்போதி உடைந்ததன் காரணமாக பொத்துவில் மொனராகலை கொழும்பு போக்குவரத்து முற்றுமுழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொத்துவில் - பாணமை வீதியின் நாவலாறு பகுதியில் பிரதான வீதியை குறுக்கருத்து செல்லும் வெள்ளத்தினால் பாணமைக்கான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இதுதவிர பொத்துவில் - இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வெள்ளம், பிரதான வீதியை குறுக்கருத்து செல்வதால் அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொத்துவிலுக்கு விடுமுறைகால சுற்றுலா வந்தவர்களும் வேறிடம் செல்ல முடியாமல் பொத்துவிலிலே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கொண்டதால் பாதிப்புற்ற மக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி பாடசாலையில் தங்கியிருப்பதையும் காண முடிகிறது.








Thursday, December 25, 2014

'அன்னம்' நீந்த வந்த வெள்ளம்!


தொடர் மழையால் பொத்துவில் பிரதேசம் கண்ட வெள்ளத்தை இங்கிருந்தே காண, கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

https://www.youtube.com/watch?v=u-JFH0dJ0sY

 

Sunday, December 21, 2014

எவெடம் எவெடம்! புளியடி புளியடி!!

 
சுமார் 100 வருடங்கள் நின்றிருந்த முதிர்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து வீதியோரம் கிடந்து முதிர்ச்சியின் தளர்ச்சியை சொல்லி அழுகிறது.
 
மூன்று நாளாய் பெய்த தொடர் மழையின் சீற்றம் அந்தப் புளிய மரத்தின் ஆயுளை முடித்து வைத்தது.
 
'எவெடம் எவெடம் ' என்று கேட்டால்......
 
'புளியடி புளியடி' என்று சொல்வார்கள்.
 
 
 
 
 
அந்தப் 'புளியடி'  இன்று வெட்டை வெளியாகத் தெரிகிறது. மனதில் கவலைதான் வருகிறது.
 
பொத்துவில் 'பிறைன்துரைக் கண்டத்தின்' பெருவீதியின் தொடக்கத்தில், நின்று நிழல் தந்து; தின்னப்பழமும் தந்து; அது நின்ற இடத்திற்கு புளியடி என்ற பெயரும் வைத்து; மறைந்த, புளிய மரத்தின் கடந்த கால நினைவுகள் இனிமையானதே!