Tuesday, February 24, 2015

வானம் பார்த்த மண்மலை!


எழில் கொஞ்சும் இயற்கை வனப்பை நீலப்பட்டாடை உடுத்துவந்து வானமது எட்டிப்பார்க்கிறது!

கடலோடு கரை கொஞ்சும் எழில், மிஞ்சி நிற்கிறது!

சவுக்கு மரங்கள் செழித்து வளர்ந்து பச்சை வண்ணம் பரப்பி நிற்கிறது!

அத்தனை அழகுக்காட்சிகளும் போதி மாதவனின் கோபுரத்தில் தஞ்சம் புகுந்து நிற்கிறது!

கொட்டுகல்லும் அருகம்துறையும் கிட்ட வந்து நிற்கின்ற காட்சி, இட்டமாய் மனதை கொள்ளை கொள்கிறது!!

இத்தனை காட்சிகளும் வீடியோவில் பதிவாகி வழிகிறது கீழே....

https://www.youtube.com/watch?v=aAMTJqs0Q1I

Thursday, February 12, 2015

பொத்துவில் கூறும் முத்தான தருணங்கள்!

   

 
 
 
 
 
 






 

Sunday, February 8, 2015

பொத்துவில் மண்ணில் கால் பதித்த அரச தேவதை!

 
மைத்திரபால சிறிசேனவின் பெருவெற்றிக்கு பெரிதும் உதவிய பொத்துவில் முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்ல நங்கையவள் வந்தாள்; தங்கப்பதுமை போல!
 
பொங்கும் இளமைப் பருவத்தில் எங்கும் புகழ் மணக்க அரசியல் அலை எழுப்பி கலையரசியவள் இங்கும் கால் பதித்தாள்!
 
மாதர்குலம் மனம் மகிழ்ந்து குரவை ஒலியெழுப்பி வரவேற்க, ஆண்குலம் சீனவெடி கொழுத்தி மகிழ்ச்சியை தெரிவிக்க, அரங்கில் வந்து அமர்ந்தாள்; ஹிருணிக்கா எனும் இளவரசி!

பெண் மனம் பெண்ணுக்குத்தான் புரியும். அதனால்தானோ எங்கள் ஊர் பெண்களின் அரசியல் தேவையெல்லாம் ஆவலோடு கேட்டறிந்தார்!

ஏறெடுத்தும் பாராத எங்கள் முஸ்லிம் கட்சிகளின் தாறுமாறான அரசியலால் அவிந்து போன மாதர் குழுவின் மனங்களுக்கு மருந்தாக ஆறுதல் வார்த்தைகள் கூறினார்; ஆவன செய்வதாகவும் உறுதிமொழி அளித்தார்!

தேர்தல் காலத்தில் மட்டும் வந்து கத்தும் தவளைகள், இவர் அமர்ந்திருந்த மேடைப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை!
 
மக்கள் வாக்குகளை  விழுங்கிய  முதலைகளும் வருகை தரவில்லை. என்றாலும் பெருந்திரளாய் மக்கள் திரண்டு பூமாலைகள் சூட்டி சுந்தர தேவிக்கு வந்தனம் தெரிவித்தனர்; வரவேற்று, வாழ்த்தி மகிழ்ந்தனர்!!

இந்நிகழ்வில் ஹிருணிக்காவை வரவேற்றல் மற்றும் அவரது மேடைப்பேச்சை கீழ்வரும் லிங்கை அழுத்துவதன் மூலம் காணலாம்.


https://www.youtube.com/watch?v=CPDr3mvRJLY

திகதி: 2015-02-08 ஞாயிற்றுக்கிழமை



 
 



 

Wednesday, February 4, 2015

பொத்துவிலில்....... புதிதாய் வந்த சுதந்திரம்!!



முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முகங்களெல்லாம் புதுமலர்வு. இப்போதுதான் இலங்கைக்கு சுதந்திரம் வந்ததோ என எண்ணுமளவுக்கு எங்கும் கொடி பறக்கிறது.

மைத்திரி வந்து சிங்கக்கொடிக்கு புது சுதந்திரம் தந்துவிட்டாரோ என்ற கேள்விக்கு விடையாக வீதியெல்லாம் கொடிகள் சுதந்திரமாய்ப் பறக்கின்றன. இல்லங்களிலும் வாகன ஊர்திகளிலும் சுதந்திர வண்ணக்கொடிகள் பறக்கின்றன. சுதந்திர உணர்வுகள் முஸ்லிம் மனங்களில் வாழ்த்துக்களாக பரிமாறப்படுகின்றன.
 
சென்ற காலங்களில் இந்தக் கொடிகள் முஸ்லிம் மனங்களில் விரும்பிப் பறக்கவில்லை. என்ன காரணம்!
 
அப்போது ஆட்சியில் இருந்தவரின் அகோரம்தான் முழுக்காரணம். அதனால்தான் அவரின்று மீட்சியே இல்லா பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார்;  அரசியல் அனாதையாக!!!


                                                          பத்திரிகை மலர்கள்
                                                          சிறப்பிதழ்கள் விரிக்க;

                                                          வானொலிக் குரல்கள்
                                                          வரலாறுகள் வாசிக்க;

                                                          தொலைக்காட்சிப் பெட்டிகள்
                                                          தொடராய் படம் பிடிக்க;

                                                          67வது அகவையை
                                                          அரசு குறைந்த செலவில்
                                                          கொண்டாடியது;

                                                          அதுவே,
                                                          மக்களுக்கு
                                                          அக மகிழ்வைத் தந்தது!




 

Sunday, February 1, 2015

அரசியல் ஓட்டப்பந்தயத்தில் அமைச்சர்கள் இருவர்!

 
 
இன்று (2015-02-01) ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலுக்கு அமைச்சர்கள் இருவர் படையெடுத்து வந்து பொதுத்தேர்தலுக்கான முஷ்தீபுகளை தொடங்கி வைத்தனர்.
வழமைக்கு மாற்றமாகவே  இந்நிழ்வுகள் இடம்பெற்றதை காணமுடிந்தது. பொதுவாக தேர்தல் கால இறுதி நேரத்தில் வந்துவிட்டு வெற்றிபெற்று பதவிகளை ருசித்து அலுத்தபின் மீண்டும் தேர்தல் வரும்போது இறுதி நேரத்தில் வருவார்கள் என்பதுதான் வழமை என்பதை பொத்துவில் மக்கள் அறிவார்கள். ஆனால் இன்று நடந்த நிழ்வுகள் அவ்வாறில்லாத பல ஆச்சரியங்களை அரங்கேற்றியது.
 
யார் அந்த அமைச்சர்கள்?
 
அணி ஒன்று கட்சி இரண்டு!
இனம் ஒன்று கொம்பு இரண்டு!!
மரம் ஒன்று கிளை இரண்டு!!!
ரவூப் ஹக்கீம் ஒன்று ரிஷாட் பதியுதீன் ஒன்று!!!!
 
முன்னால் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் நிதியொதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டு அவராலே திறந்துவைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபை புதிய கட்டிடத்தில் இன்னாள் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது கூட்டம் பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் வாசீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
அதே நேரத்தில் மர்க்கஸ் அருகில் உள்ள பஹ்ரியா வித்தியாலயத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  அங்குரார்ப்பண கூட்டம் அக்கட்சியின் பொத்துவில் மத்திய குழுவின் தலைவர் 'அப்துல்  ஹக்கீம்' அதிபர் அவர்களின் தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அலங்கரிப்புடனும் இடம் பெற்றது.
 
மக்களின் கிசுகிசுப்புகளோ இவ்வாரிருந்தது!
 
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முதன்முதலில் மைத்திரபாலவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சியான ரிஷாட் பதியுதீனின் கட்சி கிழக்கில் தம்மை விஞ்சிவிடுமோ என்ற பயத்தில் அடுத்த கணமே மைத்திரிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார் ரவூப் ஹக்கீம் அதன் தொடர்ச்சியே இன்று பொத்துவிலுக்கு ரிஸாட் பதியூதின் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு தானும் வந்திருப்பாரோ!!
 
என்றாலும் இரு கூட்டத்திற்கும் வந்த பொதுமக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போல் பொத்துவிலிலும் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பி அதற்கான தீர்வை வருகின்ற பொதுத்தேர்தலில் பெற விரும்புவதை காணமுடிகிறது!!!

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதை கீழே உள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் கேட்க முடியும்
 


அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது


அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கூட்டத்தின் போது
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொத்துவில் மீன் சந்தையை பார்வையிட்டு மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது
 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொத்துவில் மீன் சந்தையை பார்வையிட்டு மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது

தலைவர் ரிஷாட் பதியுதீன் உடன் பொத்துவில் மத்திய குழு தலைவர் ஹக்கீம் அதிபர் மற்றும் செயலாளர் சலீம் சேர் அவர்களும்

பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது

பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது

மீனவர் பிரச்சனை பற்றி கேட்டறியும்போது