வெந்நீராய் வடியும் மக்கள் கண்ணீர்!
கடந்த 06ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் உள்ள உலகப்பிரசித்திபெற்ற அருகம்குடாவில் மீன்கள் இறந்து கரையொதிங்கியது கண்டு மக்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். நிலைமை பற்றி கேள்வியுற்றோர் மீன் வலையுடனும் பல பேர் 'பேக்' குடனும் படையெடுத்தனர். இந்நிலைக்கு என்ன காரணம் என விசாரித்ததில் "வினை விதைத்தவன் வினையறுப்பான்" என்ற பழமொழிக்கிணங்க பதில் கிடைத்தது.
![]() |
படுவேகத்தில் மீன் பிடிக்கவந்த 'வெள்ளோட்ட மீனவர்கள்' |
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சில விவசாயிகளின் காணிகள் நீரில் முழ்கியது. இதனால் குறித்த விவசாயிகள் அருகம்குடா நீரை கடல் நோக்கி வெட்டிவிட்டனர். இதனால் குடா நீர் குன்றி விவசாயிகள் நன்மை பெற்றனர். (இப்போது தண்ணீரே இல்லாமல் விவசாயம் வாடி நிற்பதை மனதிற்கொள்க) பிறகுஇ ஏறத்தாள இரு மாதங்களாக மழைபொழியவில்லை. இதனால் அருகம்குடா நீரின் உப்புத்தன்மை சற்று கூடுதல் நிலையிலிருந்தது.
![]() |
ஒதுங்கிய மீன்களின் அணிவரிசை |
செத்தமீன்களும் சாகத்துடிக்கும் மீன்களும் பொதுமக்களின் அடுப்பங்கரை சட்டிகளுக்கு இலவசமாக அழகுசேர்த்தது.
பின்,இரு நாட்களுக்குப்பின் கரையொதிங்கிய மீன்களின் துர்நாற்றம் காரணமாக பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியினால் சுத்தம் செய்யப்பட்டது.
"ஒரு பக்கம் சோறு (நெல்)
மறுபக்கம் கறி (மீன்)
அழியும் நிலை;
இறைவன் விதியின் வலிமை"
that's eutrophication siraj.............over load of nutrions it will be created that stage......after that oxygen depletion will be made then low oxygen all organism like fish will be die..............
ReplyDeleteநன்றி தினேஸ் தகவலுக்கு
Deleteவருத்தப்படும் தகவல்...
ReplyDeleteஎன்ன செய்ய ................
Delete