(1999ம் ஆண்டு நடைபெற்ற சாகித்திய விழாவின் வீடியோவை இப்பதிவின் முடிவில் காணலாம்.)
கடந்த 1999-09-24ம் திகதி பொத்துவில் மைலன் தியேட்டர் அருகில் உள்ள உழந்தை வெளி பரந்த மைதானத்தில் விழாக்கோலம் பூண்டது சாகித்திய விழா!
முக்கலாசார நிகழ்வுகளும், முக்கலைவேந்தர்களும், திரண்டெழுந்த மக்கள் கூட்டமும், மாஸ்டர் ஏ.எல்.ஏ.முகம்மத் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்புரையும், விடியலை நோக்கிச்சென்று நிறைவுற்ற விழாவும் நிகழ்வுக்கு அணி சேர்த்தன.
இன்றும் என்றும் இதைப்போலொரு நிகழ்வு எவராலும் கனவிலும் நினையா அளவிற்கு நடாத்தியதன் பிரதிபலன்தான் அந்நிகழ்வில் பங்குபற்றியவர்களின் இன்றைய நிலை சிறப்பாக அமைந்திருக்கிறது.
![]() |
மாஸ்டர் ஏ.எல்.ஏ.முகம்மத் அவர்கள் |
குறிப்பாக எஸ்.எம்.எம் முஷர்ரப் (வசந்தம் டீவி நிகழ்ச்சி தொகுப்பாளர்), மறைந்த முஹம்மட்லெப்பை ஆசிரியர் அவர்களின் மகள் ஷரபியா, மறைந்த ஊடகவியலாளரும் மிருக வைத்தியருமான முகம்மது இப்றாஹீம் அவர்களின் மகள் ஹரூஷியா ( மொறட்டுவை பல்கலைக்கழக மாணவி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
![]() |
மறைந்த முஹம்மட்லெப்பை ஆசிரியர் அவர்களின் மகள் ஷரபியா |
![]() |
மறைந்த ஊடகவியலாளரும் மிருக வைத்தியருமான முகம்மது இப்றாஹீம் அவர்களின் மகள் ஹரூஷியா |
![]() |
எஸ்.எம்.எம் முஷர்ரப் (வசந்தம் டீவி நிகழ்ச்சி தொகுப்பாளர்) |
நிகழ்வுக்கு அணி சேர்த்தவர்களில் பலர் இன்று எம்முடன் இல்லை. என்றாலும் இருப்பவர்களின் கலை உணர்வை ஊக்குவிக்க நாம் ஊன்றுகோலாய் இல்லாவிட்டாலும் உணர்களை மதிக்கும் சாதாணர மனித மனம் இருத்தலிலே எதிர்கால பொத்துவிலின் கலை வளர்ச்சி தங்கியுள்ளது.
இருக்கும்போது வைதல்; இறந்தபின் வாழ்த்துதல்; இதுவே நமது செயல்!!
![]() |
கவிவாணரர் அஸீஸ் அவர்கள் |
![]() |
மறைந்த எம்.பி அப்துல் அஸீஸ் அவர்கள் |
மாற்றம் காண வழிதேடும் பொத்துவில் மக்கள் இதில் மாற்றம் காண முயலுமா! முயலைமையால் தோற்குமா!!
1999ம் ஆண்டு நடைபெற்ற சாகித்திய விழாவின் வீடியோவை காண கீழுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் காணலாம்.
No comments:
Post a Comment