திறம்பட நடைவுற்றது
'திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழா!
மாஸ்டர் ஏ.எல்.ஏ.முகம்மத் அவர்களின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழா கடந்த 08 ம் திகதி திங்களன்று பொத்துவிலில் 'கல்விச் சேவைகள் கலா மன்றத்தின்' தலைமையின் கீழ் நடைபெற்றது.
நிகழ்வுகள் முன்னாள் அதிபர் எம்.சி.எம். சம்சுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற கருத்துரை, இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தலைவர் அல்ஹாஜ் ஏ.பி. கமால்தீன் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் ஏ.ஏ. தாரிக் அஸீஸ் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட அதைத் தொடர்ந்து நூல் ஆய்வுரை எஸ்.எம்.எம். முஷர்ரப் அவர்களினால் வழங்கப்பட்டது.
நூலாசிரியர் தனது ஏற்புரை நிகழ்வில் பேசும் போது,
"என்னைப் பொருத்தவரையில் இந்நூல் ஓர் பிரியாவிடை நூல். நான் ஆசிரிய சேவையில் 33 வருடங்களுக்கு மேலிருந்து, உங்களிடமிருந்து பிரியாவிடை பெறத்தானே வேண்டும். அதற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் இந்நூலை என் பிரியாவிடைப் பரிசாக உங்களுக்கு கையளிக்கிறேன்" என்று கூறினார்.
![]() |
நுலாசியிருடன் றிபாய் சேர்,சலீம் சேர் |
![]() |
டொக்டர் ரஸீம் மற்றும் சலீம் ஆசிரியருடன் நூலாசிரியர் |
No comments:
Post a Comment